Showing posts with label Windows Tips. Show all posts
Showing posts with label Windows Tips. Show all posts

Pen Drive இல் ஃபைல்களைக் காண்பிக்கவில்லையா? 

பென் ட்ரைவ் ஒன்றைகணினியில் செருகும் போது பென் ட்ரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப்பென் ட்ரைவைத் திற்ந்து பார்க்கும் போதுஅதிலிருக்கும்கோப்புக்களை கிலவேளைகளில் காண்பிக்காது. அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்துவிட்டதோ எனநீங்கள் நினைக்கலாம். இது உண்மையில் வைரஸ்  காரணமாக ஏற்படும்  ஒரு பாதிப்புத்தான் என்றாலும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தகோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் ட்ரைவில் கோப்புக்கள் மறைத்துவைக்கப்படும். அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண் டு வழிகளில் மறுபடிதோன்றச் செய்யலாம்.

வழிமுறை 1
(விண்டோஸ் 8 கணினியில்)



முதலில் பென் ட்ரைவை கணினியில் செருகுங்கள்.  அடுத்துபைல் எக்ஸ்ப்லோர்ரைத் File Explorer திறந்துகொள்ளுங்கள் திறக்கும் விண்டோவில் View டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு show / hide பகுதியில் hidden items என்பதைத் தெரிவுநிலைக்குமாற்றுங்கள்.
(விண்டோஸ் 10 கணினியில்)





Start பட்டன் மீதுரைட் க்ளிக் செய்துவரும் மெனுவின் மூலம் Control Panel நுளையுங்கள். அங்கு Appearance and Personalization என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.அப்போதுதோன்றும் File Explorer Options பெட்டியில் View டேபின் கீழ் Show hidden files and folders  என்பதைத் தெரிவுநிலைக்கு மாற்றுவதோடு Hide protected operating System files (Recommended) எனபதை தெரிவு நிலையிலிருந்து நீக்கிவிட்டு ஓகே செய்து டயலொக் பொக்ஸை மூடிவிடுங்கள்.

வழிமுறை 2

” Start” பட்டனில் ரைட் க்ளிக் செய்  து வரும் மெனுவில்  Run தெரிவுசெய்யவரும் பெட்டியில்  cmd என டைப் செய்து Enter விசையைஅழுத்துவதன் மூலம் கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுளையுங்கள். அங்கு கீழே தரப்பட்டிருக்கும் கட்டளையை டைப்; செய்து எண்டர் செய்யுங்கள்

attrib -h -r -s / s / d g: \ *. *  நீங்கள் இக்கட்டளையை நகலெடுத்து ஒட்டவும் (copy/paste) முடியும்.


இங்கு “g” என்பது எனது கணினியில் பென் ட்ரைவிற்குக் கொடுக்கப்படும் எழுத்தாகும். உங்கள் கணினியில் பென் ட்ரைவிற்குரிய எழுத்தை “g” ற்குப் பதிலாக இடுங்கள். இப்போதுஉங்கள் பெண்ட்ரைவில்  கோப்புகள் காண்பிக்கப்படுகிறதா எனப் பாருங்கள்.

ஃபோல்டர் ஒன்றை இப்படியும் மறைக்கலாமே?

ஒரு ஃபோல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்து அந்த ஃபோல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize  டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கான்களைக் அங்கே காணலாம்.

அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும்பொது ஐக்கான்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம். அதிலுள்ள ஒரு வெற்றிடத்தில் க்ளிக் செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும். அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய ஐக்கான். இப்போது ஓகே செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த ஃபோல்டர் மறைந்து விடுவதைக் காணலாம். மவுசைப் பயன் படுத்தி அந்த போல்டர் இருந்த பகுதியைத் தெரிவு செய்யும் போது மட்டுமே ஒரு ஃபோல்டர் இருப்பது கண்ணுக்குப் புலப்படும்.

இந்த ஃபோல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டுப் பாதுகாக்கலாம். யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து ((Hidden Folders)) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பனதாகும்.

கணினி Sleep Mode ற்குச் செல்வதைத் தடுப்பது எப்படி?


விண்டோஸ் கணினியில்  குறிப்பிட்ட  நேரம்  எந்த இயக்கமும் இல்லாமல் இருந்தால்   இயல்பாக ஸ்லீப் உறங்கு நிலைக்குச் (Sleep Mode)  செல்லுமாறு செட்டிங் செய்யப்பட்டுளது. கணினியில் ஏதாவது செயலிகள் செயற்பாட்டில் இருக்கும் போதும் கூட (மீடியா ப்லேயர் தவிர்த்து)  இவ்வாறு நிகழலாம்.


அடிக்கடி உங்கள் கணினி ஸ்லிப் மோடிற்குச் செல்லுமாயின் power options மூலம் அதனை மாற்றி அமைக்க முடியும்.
அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்
முதலில் கண்ட்ரோல் பேணல் சென்று அங்கு Power options தெரிவு செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் இடப்புறம் உள்ள  Change when the computer sleeps என்பதில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Put the computer to sleep எனுமிடத்தில் Never தெரிவு செய்து  Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

Printing tips

கடைசிப் பக்கத்திலிருந்து அச்சிட..

எம்.எஸ்.வர்டில் பல பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை அச்சிட்டு முடிந்த பின்னர் அச்சிட்ட தாள்கள் அனைத்தும் பக்கம் 1,2,3 என இல்லாமல் 20,19,18 என ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் ஆரம்பித்து முதல் பக்கம் வரை அச்சுப் பொறியின் மேல் அடுக்கப்படுவதைக் காணலாம். அதாவது முதலில் அச்சிட்ட காகிதம் அடியிலும் இறுதியாக அச்சிட்டது மேலேயும் இருக்கும். இதனை மீண்டும் பக்கம் 1,2,3  என வரிசைப் படுத்த வேண்டியிருக்கும். அதற்கு இன்னும் நேரம் எடுக்கும். எனினும் அச்சிட்ட பின்னர் பக்கம் 1,2,3 என வரும்படி செய்யும் வசதி எம்.எஸ் வர்டில் உள்ளது. அதற்கு கடைசி பக்கத்தை முதலில் அச்சிட்டு பின்னோக்கி முதல் பக்கம் வரை அச்சிடலாம்.  அதற்கு File டேபில் க்ளிக் செய்து  Word Options தெரிவு செய்யுங்கள். அங்கு Advanced பட்டணில் க்ளிக் செய்து Print vDk; gFjpapd; fPo; Print pages in reverse order என்பதைத் தெரிவு செய்து OKசொல்லுங்கள்.  

How to hide a drive?

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைக்க...

உங்கள் கணினியில் உள்ள பைல்களை பிறர் பார்வையில் படாதபடி  மறைத்து வைப்பது போன்று ட்ரைவ்களையும் மறைத்து வைக்கலாம். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட பைல்களை எவரும் அனுகாமல் பாதுகாக்கலாம். இந்த வசதி விண்டோஸ் இயங்கு தளத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்கிறது.

ட்ரைவ் ஒன்றை மரைத்து வைப்பதற்கு  முதலில் ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்யுங்கள். அல்லது WinKey+ R விசைகளை ஒரே நேரத்தில்  அழுத்துங்கள். வரும் ரன் பொக்ஸில் diskpart என டைப் செய்யுங்கள். அப்போது கமாண்ட் ப்ரொம்ட் விண்டோ திறந்து கொள்ளும். அங்கு list volume என டைப் செய்யும் போது உங்கள் கணினியிலுள்ள ட்ரைவ்களைப் பட்டியலிடும். அதாவது ட்ரைவ் பெயருடன் அதற்குரிய எழுத்துக்களையும் காண்பிக்கும். உங்களுக்கு e ட்ரைவை மறைக்க வேண்டுமெனின் select volume e  என டைப் செய்யுங்கள். இங்கு e ற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் ட்ரைவ் எழுத்தை வழங்கலாம். இப்போது நீங்கள் வழங்கிய ட்ரைவ் எழுத்துக்குரிய ட்ரைவ் தெரிவு செய்யப்படும். அடுத்து  remove letter h  என டைப் செய்து  எண்டர் விசையை அழுத்த அந்த ட்ரைவ் மறைக்கப் பட்டு விடும். இப்[போது கம்பியூட்டர் அல்லது This PC  விண்டோவைத் திறக்க e ட்ரைவ் மறைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


மறு படி அந்த ட்ரைவைத் தோன்றச் செய்ய வெண்டுமானால் மேற் சொன்ன அதே வழியைப் பின்பற்றி remove என்பதற்குப் பதிலாக assign letter e என டைப் செய்ய வெண்டும். -அனூப்-

Useful Windows tip

உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்

நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?

அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம். கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும். இங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

–அனூப்-