Find IT  - Android App 




ஸ்மாட் ஃபோனைப் பயன் படுத்தி புத்தகங்கள் ஆவணங்;களில்உள்ள வார்தi;தகளைத் தேடஉதவுகிறது Find IT  எனும் அண்ராயிட் செயலி. OCR (Optical Character Recognition)  தொழிநுட்பம் மற்றும்  ஆக்மெண்ட்டட் ரியாலிட்டிதொழிநுட்பம் இணைத்துஉருவாக்கப்பட்டுள்ள    இச்செயலியின் மூலம்  நீங்கள் ஒரு ஆவணத்தில் அல்லதுபுத்தகத்தின்  பக்கமொன்றில்  தேடவேண்டிய வார்த்தையை இலகுவாகத் தேடலாம்.தேட வேண்டிய வார்த்தையை டைப் செய்து கேமரா ஐக்கானைத் தட்டிவிட்டு ஆவணத்தின் மீது கேமராவை சுட்டிக் காட்டும் போது   இச்செயலிஅந்தஆவனத்தை ஸ்கேன் செய்து நீங்கள் தேடும் வார்த்தை இருக்கும் இடங்களை அடையாளப்படுத்துகிறது.  இது கணினியில் CTRL-F விசைகளைத்  அழுத்தி கோப்புக்களைத் தேடும் செயற்பாடு போன்றதே.

Android கருவியில் செயலிகள் பயன்படுத்தாமல் கோப்புக்களை மறைக்க




சில நேரங்களில், எமது  ஸ்மார்ட்ஃபோனை நண்பருடன்  பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை வரக்கூடும். அவ்வேளைகளில்  ஸ்மாட்போன் கருவியிலுள்ள  எமது தனிப்பட்ட படங்கள், வீடியோ  மற்றும் ஆவணங்கள் போன்ற கோப்புக்களை  நண்பர்   பார்த்து விடுவாரோ என்ற அச்சமும் ஏற்படும். அதனால் முக்கியமான கோப்புக்களை யாரும் பார்த்திடா வண்ணம் எவ்வாறு பாதுகாப்பது என்ற  கேள்வி உங்களுக்கிருக்கலாம்.

நீங்கள் அண்ட்ரொயிட் பயனராக இருந்தால், கோப்புகள் (files)  மற்றும் கோப்புறைகளை (folders)  மறைக்கப் பயன்படுத்தக்கூடிய ஏராளமான  செயலிகள் கூகில் ப்லே ஸ்டோரில்  உள்ளன. எனினும்  அது உங்கள்  ஸ்மாட்போன் கருவியின் நினைவகம்  மற்றும் தேக்க அலகில்  சில மெகாபைட் அளவு   இடத்தைபிடித்துக்  கொள்ளும். உங்கள் கருவியில் அதிகளவு  நினைவகம் அல்லது சேமிப்பகம் இருக்குமானால் சிக்கல் இல்லை. ஆனால் மிக குறைவாக இருக்கும்போது ​​புதிய செயலிகளை  நிறுவ முடியாமல் போகலாம்.
இருப்பினும், உங்கள் தகவல்களைப் பாதுகாக்க எந்த புதிய செயலிகளையும்  நிறுவ விரும்பவில்லை என்றால், உங்களுக்கு  ஒரு எளிய தீர்வு உள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுச் செயலிகள் எதுவும் நிறுவாமல் அண்ட்ரொயிட் கருவிகளில் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை மறைத்து வைக்கப் பின்வரும்  வழிமுறையைக் கையாளலாம்.

ஒவ்வொரு அண்ட்ராய்டு சாதனமும் இயல்புநிலையில்  File manager அல்லது  File explorer  எனும்  கோப்பு நிர்வாக செயலியைக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் புதிதாக ஒன்றை நிறுவ வேண்டியதில்லை.

முதலில்  File manager அல்லது  File explorer  சென்று  ஒரு புதிய கோப்புறையை (folders) உருவாக்கவும், உங்கள் தனிப்பட்ட கோப்புக்களை   அதற்குள்  (move)  நகர்த்தவும்.

இப்போது உங்கள் கோப்புறையின் பெயருக்கு முன்னால் ஒரு புள்ளியைச் (.) சேர்த்து உங்கள் கோப்புறையை  பெயர் மாற்றம்  செய்ய (rename) வேண்டும்.  உதாரணமாக உங்கள் கோப்புறை பெயர் New folder என இருந்தால் அதன் பெயரை  .New folder என மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கோப்புறை மறைந்துவிடும். ஸ்மாட் போன் கருவியில்  கோப்புக்கள் மறைந்திருப்பதால் அதனையிட்டுக் கவலைப் பட  வேண்டியதில்லை. ஒரு சாதாரண கோப்புறையைப் போலவே முழு அணுகலும் உங்களுக்கு கிடைக்கும்.
இப்போது உங்கள் கோப்புறையைப் பார்க்க வேண்டுமாயின்  File manager இல்   மறைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளைக் காட்சிப்படுத்துவதற்கான கட்டளையை (Show hidden files and folders) தெரிவு  செய்யுங்கள்.

இது உங்கள் Android சாதனத்தில் மூன்றாம் தரப்பு பயன்பாடு இல்லாமல் ஒரு கோப்புறையை மறைக்க எளிதான வழி முறையாகும்

https://youtu.be/lpekG-QWICk

Android App - ஃபைல்ஸ் கோ Files Go



ஃபைல்ஸ் கோ (Files Go) என்பது அண்ட்ரொயிட்  கருவிகளுக்காக கூகில் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு  புதிய செயலி. இதன் மூலம் மொபைல் கருவியிலுல்ள கோப்புக்களை இலகுவக நிர்வகிக்க முடிகிற்து. குறிப்பாக  உங்கள்  மொபைல் கருவியில்  உள்ள  தேவையற்ற பைல்களை நீக்க உதவுவதோடு அதன் மூலம் அதிக  வெற்றிடத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் பைல்களை இலகுவாகத் தேட முடிவதோடு அதனை பிறருடன்  பரிமாறிக் கொள்ள்ளவும் முடிகிறது.

உங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள்  நண்பருக்கு எவ்வாறு தோன்றும்?



உங்கள் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடும் எவரும் நீங்கள் யார், உங்கள் கல்வித் தகைமை என்ன,  உங்கள் விருப்பு வெறுப்புக்கள் என்ன, உங்கள் நண்பர்கள் யார், போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் பதிவிடும் விடயங்கள்  பகிரங்கமானவை (Public)  என அனுமதி வழங்கி விட்டால் உங்களை தனிப்பட்ட முறையில் அறியாதவர்கூட அவற்றைப் பார்வையிட முடியும்.
உங்கள் பதிவுகளைப் பகிரங்கப் படுத்துவதனால்   சில வேளைகளில் உங்களுக்கு சில சங்கடங்களையும் ஏற்படுத்தக் கூடும். அதனால் அவற்றைத் தவிர்ப்பதற்கு சில முன்னேற்பாடுகளையும் privacy serttings மூலம் செய்து கொள்ள முடியும்.

எனினும் இந்த privacy serttings இல் செய்யப்படும் மாற்றங்கள் முறையாக இயங்குகிறதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்வதற்கான வசதியையும் பேஸ்புக் தருகிறது. இந்த வசதியின் மூலம் உங்கள் பேஸ்புக் பக்கம்  உங்கள் நண்பருக்கு  எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைக் காண்பிக்கும்.
எவ்வாறு  முன்னெச்சரிக்கையோடு பேஸ்புக் பயன்படுத்தும் போது எமது தனிப்பட்ட அந்தரங்க விடயங்கள் பகிரங்கமாவதிலிருந்தும்  தவிர்ந்து கொள்ள முடியும்.

உங்கள் பேஸ்புக் பக்கம்  உங்கள் நண்பருக்கு  எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்..

முதலில் பேஸ்கணக்கில் நுழைந்து  அட்டைப்படத்தின் (cover photo)    கீழ் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் சிறிய மெனுவில். View as என்பதைத் தெரிவு செய்யுங்கள்.  அப்போது உங்கள் நட்புப் பட்டியலில் இல்லாத ஒருவருக்கு உங்கள் பேஸ்புக் பக்கம் எவ்வாறு தோன்றும் என்பதைக் காணலாம்.

அதேபோன்று View as specific person எனும் லிங்கில் கிளிக் செய்ய வரும் பெட்டியில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் நண்பர் ஒருவரின்  பெயரை டைப்  செய்வதன் மூலம் அந்த நண்பர் உங்கள் பேஸ்புக் பக்கத்தை எவ்வாறு காண்பார் என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.

சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு உங்கள் பதிவுகளைக் காண்பிக்க விரும்பா விட்டால் இந்த வசதி மூலம் அதனை உறுதி செய்து கொள்ள முடியும். எனினும் ஒரு பதிவை இடும் போது அப்பதிவை யாரிலிருந்து மறைக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே தெரிவு செய்து கொள்ள வேண்டும். 

Pen Drive இல் ஃபைல்களைக் காண்பிக்கவில்லையா? 

பென் ட்ரைவ் ஒன்றைகணினியில் செருகும் போது பென் ட்ரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப்பென் ட்ரைவைத் திற்ந்து பார்க்கும் போதுஅதிலிருக்கும்கோப்புக்களை கிலவேளைகளில் காண்பிக்காது. அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்துவிட்டதோ எனநீங்கள் நினைக்கலாம். இது உண்மையில் வைரஸ்  காரணமாக ஏற்படும்  ஒரு பாதிப்புத்தான் என்றாலும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தகோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் ட்ரைவில் கோப்புக்கள் மறைத்துவைக்கப்படும். அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண் டு வழிகளில் மறுபடிதோன்றச் செய்யலாம்.

வழிமுறை 1
(விண்டோஸ் 8 கணினியில்)



முதலில் பென் ட்ரைவை கணினியில் செருகுங்கள்.  அடுத்துபைல் எக்ஸ்ப்லோர்ரைத் File Explorer திறந்துகொள்ளுங்கள் திறக்கும் விண்டோவில் View டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு show / hide பகுதியில் hidden items என்பதைத் தெரிவுநிலைக்குமாற்றுங்கள்.
(விண்டோஸ் 10 கணினியில்)





Start பட்டன் மீதுரைட் க்ளிக் செய்துவரும் மெனுவின் மூலம் Control Panel நுளையுங்கள். அங்கு Appearance and Personalization என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.அப்போதுதோன்றும் File Explorer Options பெட்டியில் View டேபின் கீழ் Show hidden files and folders  என்பதைத் தெரிவுநிலைக்கு மாற்றுவதோடு Hide protected operating System files (Recommended) எனபதை தெரிவு நிலையிலிருந்து நீக்கிவிட்டு ஓகே செய்து டயலொக் பொக்ஸை மூடிவிடுங்கள்.

வழிமுறை 2

” Start” பட்டனில் ரைட் க்ளிக் செய்  து வரும் மெனுவில்  Run தெரிவுசெய்யவரும் பெட்டியில்  cmd என டைப் செய்து Enter விசையைஅழுத்துவதன் மூலம் கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுளையுங்கள். அங்கு கீழே தரப்பட்டிருக்கும் கட்டளையை டைப்; செய்து எண்டர் செய்யுங்கள்

attrib -h -r -s / s / d g: \ *. *  நீங்கள் இக்கட்டளையை நகலெடுத்து ஒட்டவும் (copy/paste) முடியும்.


இங்கு “g” என்பது எனது கணினியில் பென் ட்ரைவிற்குக் கொடுக்கப்படும் எழுத்தாகும். உங்கள் கணினியில் பென் ட்ரைவிற்குரிய எழுத்தை “g” ற்குப் பதிலாக இடுங்கள். இப்போதுஉங்கள் பெண்ட்ரைவில்  கோப்புகள் காண்பிக்கப்படுகிறதா எனப் பாருங்கள்.